தமிழக செய்திகள்

கஞ்சா கடத்தி வந்த ஒடிசா வாலிபர் கைது

ரெயிலில் கடத்தி வந்த 13 கிலோ கஞ்சாவை காட்பாடி ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தி வந்த ஒடிசா வாலிபரை கைது செய்தனர்.

காட்பாடி

ரெயிலில் கடத்தி வந்த 13 கிலோ கஞ்சாவை காட்பாடி ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தி வந்த ஒடிசா வாலிபரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரெயில் பெட்டிகளில் சோதனை

காட்பாடி ரெயில் நிலையத்தில் காட்பாடி ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுகிறதா? என நேற்று அதிகாலை தீவிர சேதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் இருந்து பெங்களூரு கண்டோன்மென்ட் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்தில் வந்து நின்றது.

அந்த ரெயிலின் பெட்டிகளில் ஏறி ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கழிவறை அருகே 3 பைகள் இருந்தன. அதை போலீசார் சோதனை செய்தனர். அந்தப் பைகளில் 7 பொட்டலங்களில் 13 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

ஒடிசா வாலிபர் கைது

7 பொட்டலங்களில் இருந்த கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சக்ரதர்செட்டி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் எங்கிருந்து கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்தார்? எங்கு விற்பதற்காக கொண்டு செல்கிறார்? என்பது குறித்து பேலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை