திருக்காட்டுப்பள்ளி;
பூதலூர் அருகே உள்ள ஒரத்தூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் குஞ்சம்மாள் (வயது80). இவர் வீட்டில் தடுமாறி கீழே விழுந்து இடுப்பு எலும்பு முறிந்தது. இடுப்பில் வலி தாங்காமல் வீட்டில் இருந்த அவர் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய குஞ்சம்மாள் உயிரிழந்தார். இது குறித்து தோகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.