தமிழக செய்திகள்

ஆன்லைன் செஸ் போட்டி: அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய சிறுவன் பிரக்னா நந்தாவுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் ஆன்லைன் செஸ் போட்டியில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய சிறுவன் பிரக்னா நந்தாவுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

சர்வதேச செஸ் கூட்டமைப்பு ஆன்லைன் செஸ் போட்டிகளை ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 30வரை நடத்தி வருகிறது. இதில் இந்தியா சார்பாக விளையாடிய சென்னை சிறுவன் பிரக்னா நந்தா(15) வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் ஆன்லைன் செஸ் போட்டியில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய சிறுவன் பிரக்னா நந்தாவுக்கு முதலமைச்சர் பழனிசாமி அவரது டுவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் இறுதி சுற்றிலும் வெற்றி பெற்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை தேடி தர வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி