தமிழக செய்திகள்

ஊட்டி மலை ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது...!

கனமழை காரணமாக மலை ரெயில் பாதைகளில் மண் சரிவு ஏற்பட்டிருந்தது.

தினத்தந்தி

நீலகிரி, 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதன் காரணமாக இம்மாத தொடக்கம் முதலே தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இதில் நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக மலை ரெயில் பாதைகளில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பாதை சரி செய்யப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் பெய்த மழையால் கில் குரோவ் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்தன. இதன் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரெயில் போக்குவரத்து கடந்த 3 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்தது.

தற்போது இந்த பணிகள் முடிந்து தண்டவாளம் சரி செய்யப்பட்டுள்ளது. இதனால் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு