தமிழக செய்திகள்

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு

காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணை இன்று திறக்கப்பட்டது. முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தினத்தந்தி

மேட்டூர்

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர், அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் மாதம் 12-ந் தேதிக்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதியான இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையை திறந்து வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறையினர் செய்து இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்