கோவில்பட்டி:
கோவில்பட்டி கல்வி மாவட்டத்திலுள்ள 580 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. பள்ளிக்கு மாணவ, மாணவியர் உற்சாகமாக வந்தனர். இந்த வகையில் கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு வந்த மாணவ- மாணவியருக்கு நகர சபை தலைவர் கருணாநிதி இனிப்பு வழங்கி, எழுத்து பொருட்கள் கொடுத்து வரவேற்றார். அனைத்து மாணவர்களுக்கும் நோட்டு புத்தகங்களை வட்டார கல்வி அதிகாரிகள் முத்தம்மாள், பத்மாவதி வழங்கினா.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று, கோவில்பட்டி புது ரோட்டிலுள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நேற்று வகுப்புக்கு வந்த மாணவர்களுக்கு போக்குவரத்து சப்- இன்ஸ் பெக்டர் பாலசுப்பிர மணியன், மற்றும் போலீசார் ரோஜா பூக்கள், இனிப்பு வழங்கி வரவேற்றனர்.