தமிழக செய்திகள்

ஆளுநர் மாளிகையில் சுபாஷ் சந்திரபோஸ் சிலை திறப்பு - வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்தநாளையொட்டி, சென்னை ஆளுநர் மாளிகையில் அவரது உருவ சிலையை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

தினத்தந்தி

சென்னை,

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 123 வது பிறந்தநாளையொட்டி, சென்னை ஆளுநர் மாளிகையில் அவரது உருவ சிலையை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரேகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டேர் கலந்து கெண்டனர்.

நிகழ்ச்சியில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது,

"இந்திய தாயின் சிறப்புமிக்க புதல்வர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் உருவ சிலையை திறந்து வைப்பதில் நான் பெருமையடைகிறேன். இந்தியாவின் விடுதலைக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தவர் நேதாஜி.

உங்கள் ரத்தத்தை தாருங்கள், நான் உங்களுக்கு சுதந்திரத்தை தருகிறேன் என்று சுபாஷ் சந்திரபோஸ் கூறிய வார்த்தைகள், இந்திய விடுதலைக்காக போராடிய லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளித்தது.

நேதாஜியின் சிலையை நிறுவுவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட தமிழக ஆளுநருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரின் சிலைகளோடு நேதாஜியின் சிலையும் இன்று இந்த இடத்தில் இருக்கிறது என்று கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு