தமிழக செய்திகள்

தமிழகம் முழுவதும் 500 சிறப்பு பஸ்கள் இயக்கம்

தை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை, தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தினத்தந்தி

சென்னை,

தை அமாவாசையை முன்னிட்டு நேற்று முதலே நூற்றுக்கணக்கானவர்கள் ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களில் நீராடி பித்ரு பூஜைகள் செய்ய குவிந்து வருகின்றனர். இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக சென்னை கிளாம்பாக்கத்திலிருந்தும், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து ராமேஸ்வரத்துக்கும் ராமேஸ்வரத்திலிருந்து சென்னை கிளாம்பாக்கம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதலாக 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதே போன்று நாளை பிப்ரவரி 10, 11 (சனி, ஞாயிறு) தேதிகளில் வளர்பிறை சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் வார கடைசி நாட்கள் என்பதால் சென்னையிலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தேறும் இயக்கப்படும்  பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 

அதே போன்று பெங்களூருவிலிருந்து பிற இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 500 பஸ்கள் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்