தமிழக செய்திகள்

8,888 பேருக்கான சீருடைப் பணியாளர்கள் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

8,888 பேருக்கான சீருடைப் பணியாளர்கள் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணைய தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை ஐகேர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 8,888 பேருக்கான சீருடைப் பணியாளர்கள் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், எல்லா தேர்வுகளிலும் முறைகேடு நடப்பது கேலிக்கூத்தாக உள்ளது எனவும் முறைகேடுகளால் மக்கள் தேர்வுகள் மீது நம்பிக்கை இழந்து விட்டனர் என்று கூறிய நீதிபதி மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க டிஜிபி, சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்