தமிழக செய்திகள்

வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் கொரோனா 3-வது அலை: தமிழகத்தில் அறிகுறி? ராதாகிருஷ்ணன் பதில்

வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் கொரோனா 3-வது அலை: தமிழகத்தில் அறிகுறி? ராதாகிருஷ்ணன் பதில்

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் நடைபெறும் 6ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் மூலம் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 1.40 கோடி முதியவர்களில் 47 லட்சம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.

2-வது தவணை தடுப்பூசியை 22 லட்சம் முதியவர்கள் மட்டுமே போட்டுள்ளனர். இறப்பு விகிதம் அதிகமுள்ளோர் கொரோனா தடுப்பூசி போடாமல் இருப்பது சரியல்ல.

தமிழகத்தில் இதுவரை கொரோனா 3-வது அலைக்கான அறிகுறிகள் இல்லை. அறிகுறிகள் இல்லை என்றாலும் 3-வது அலை வராது என்று கூற இயலாது. வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் சிலவற்றில் கொரோனா 3-வது அலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது. மழை காலங்களில் பரவும் நோய்களில் இருந்தும் மக்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்