தமிழக செய்திகள்

பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் தீர்மானம்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தேனி மாவட்ட 4-வது மாநாடு தேனியில் நடந்தது

தினத்தந்தி

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தேனி மாவட்ட 4-வது மாநாடு தேனியில் நடந்தது. மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பாலசுப்பிரமணி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் தர்மர் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அண்ணாமலை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சுருளி மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர்.

மாநாட்டை நிறைவு செய்து மாநில தலைவர் செல்லக்கண்ணு பேசினார். இந்த மாநாட்டில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டனர். மேலும், தமிழகத்தில் சாதி ஆணவ படுகொலையை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும், தேனி மாவட்டத்தில் பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும், சாதி பாகுபாடு, தீண்டாமை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு