தமிழக செய்திகள்

ஓய்வூதியர்கள் கோரிக்கை மனு அனுப்பலாம்

தனி கலெக்டர் அலுவலகத்தில் அடுத்த மாதம் (ஜனவரி) நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு ஓய்வூதியர்கள் கோரிக்கை மனுவை அனுப்பலாம்.

தினத்தந்தி

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்டத்தில் தமிழக அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற அரசு பணியாளர்களுக்கான நிலுவையிலுள்ள ஓய்வூதியப் பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவது தொடர்பான குறைகளை பரிசீலனை செய்யும் பொருட்டு, ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அடுத்த மாதம் (ஜனவரி) 6-ந்தேதி நடக்கிறது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்குகிறார். சென்னை ஓய்வூதிய இயக்குனர் முன்னிலை வகிக்கிறார். எனவே, மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதிய சங்கங்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை "மாவட்ட கலெக்டர், மாவட்ட கலெக்டர் அலுவலகம், தேனி " என்ற முகவரிக்கு வருகிற 23-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் நாளில் மாவட்டத்தில் கோரிக்கை நிலுவையில் உள்ள அனைத்து ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஓய்வூதிய சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்