தமிழக செய்திகள்

பிடாரி குளத்தில் படித்துறையை சீரமைக்க வேண்டும்

திருமருகல் அருகே, புறாக்கிராமத்தில் உள்ள பிடாரி குளத்தில் படித்துறையை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

திருமருகல் அருகே, புறாக்கிராமத்தில் உள்ள பிடாரி குளத்தில் படித்துறையை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிடாரி குளம்

நாகை மாவட்டம் திருமருகல் அருகே கட்டுமாவடி ஊராட்சியை சேர்ந்த புறாக்கிராமம் கீழத்தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கீழத்தெருவில் பிடாரி குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கு மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் குளத்தின் படித்துறை முழுவதும் சேதமடைந்து, சரியான முறையில் பராமரிக்கப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் குளத்தில் செடி, கொடிகள் படர்ந்து கிடப்பதால் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

நடவடிக்கை

படித்துறையை சீரமைத்து தரவேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை சீரமைக்கப்படவில்லை.

எனவே ஆபத்தான நிலையில் உள்ள பிடாரி குளத்தின் படித்துறையை சீரமைத்து, குளத்தை தூய்மைப்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்