தமிழக செய்திகள்

காய்ச்சல், சளி, உடல் வலி உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்

காய்ச்சல், சளி, உடல் வலி உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

நமது நாட்டில் ஒமைக்ரான் தொற்று பரவலுக்கு மத்தியில் கொரோனா பரவல் அதிவேகம் எடுக்கிறது. தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா பரிசோதனைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மக்கள்நல்வாழ்வுத்துறை,

* காய்ச்சல், சளி, இருமல், மூச்சுதிணறல், உடல்வலி இருந்தால் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

* கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைப்பு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும்.

* கொரோனா பாதித்த நபருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு அறிகுறி இல்லை என்றால் பரிசோதனை தேவையில்லை.

* 60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய் உள்ளவர்கள் பரிசொதனை செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை