தமிழக செய்திகள்

தமிழகத்தில் 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதி: சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

தமிழகத்தில் 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து பள்ளிகளில் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னை,

கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற செம்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான பள்ளி வகுப்பு திறக்கப்பட்டு சுழற்சி முறையில் நடைபெறும் என அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பணியாளர்கள் மூலம் பள்ளி வகுப்பறை, பள்ளி வளாகம், கழிப்பறை, முகப்பு பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி வகுப்பறை முழுவதும் தண்ணீர் மூலம் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்றது. இதுதவிர பள்ளி பதிவேடுகள், பராமரிப்பு அறை உள்ளிட்டவைகள் பராமரிப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை