தமிழக செய்திகள்

குழாய்கள் பதிக்கும் பணி எதிரொலி: போடியில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

குழாய்கள் பதிக்கும் பணி எதிரொலியாக போடியில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

போடி நகராட்சி பகுதிக்கு கொட்டக்குடி ஆற்றில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு சுத்திகரித்து வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நகராட்சி பகுதியில் 4 இடங்களில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த தொட்டிகளில் ஏற்றுவதற்காக முல்லைப்பெரியாறு இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் போடி குரங்கணி கொட்டக்குடி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வர குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் நாளை (புதன்கிழமை), நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் போடி பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை போடி நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) செல்வராணி தெரிவித்தார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்