தமிழக செய்திகள்

தாய் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தற்கொலை

பட்டாசு கேட்டு தங்கையிடம் வாக்குவாதம் செய்ததை தாய் கண்டித்ததால், பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையம் சாமாண்ணா நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகள் ஜெயதாரணி (வயது 16). இவர், பட்டிவீரன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று இவரது தங்கை வீட்டில் பட்டாசு வெடித்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ஜெயதாரணி தனக்கும் பட்டாசு தரவேண்டும் என்று கூறி வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.

இதனைக்கண்ட அவரது தாய் நாகப்பிரியா, ஜெயதாரணியை கண்டித்தார். இதனால் மனமுடைந்த ஜெயதாரணி வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பட்டிவீரன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் ஜெயதாரணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பேலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை