தமிழக செய்திகள்

விஷ சாராய விவகாரம்: இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணம் என்ன? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

விஷ சாராயம் அருந்தி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

விஷ சாராயம் அருந்திய 17 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், சிகிச்சை பெறுபவர்களின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் அமைச்சர் மா சுப்பிரமணியன் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்திய 168 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பெற தயங்கிய 55 பேருக்கு மருத்துவமனை அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. விஷ சாராயம் அருந்தியவர்கள் சிலர் மருத்துவமனைக்கு வர தயக்கம் காட்டியதே இத்தனை உயிரிழப்புகள் ஏற்படக் காரணம். விஷ சாராயம் அருந்தியதில் மூன்று பெண்கள் உட்பட 48 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு 600 படுக்கைகள் கொண்ட கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் கள்ளக்குறிச்சியில் கூடுதலாக 50 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கள்ளக்குறிச்சிக்கு கூடுதலாக 37 மருத்துவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு