தமிழக செய்திகள்

திருவாரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவாரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவாரூர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

கண்காணிப்பு பணி

நாடு முழுவதும் சுதந்திர தின விழா இன்று(திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.சுதந்திர தினத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திருவாரூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டனர். ரெயில் நிலையம், தண்டவாளம் போன்ற இடங்களில் காண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ரெயிலில் சோதனை

காரைக்காலில் இருந்து திருச்சி சென்ற ரெயிலில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயசந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், துரைசாமி, முத்துலஸ் ஆகியோர் பயணிகள் உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது பாதுகாப்பான பயணத்திற்கு ரெயில்வேத்துறை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு பயணிகளும் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பயணிகளுக்கு வழங்கினர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்