தமிழக செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸ் அணிவகுப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸ் அணிவகுப்பு நடைபெற்றது.

தினத்தந்தி

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டும், பொதுமக்கள் நட்புறவை பேணும் வகையிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் உத்தரவின் பேரில் வாரந்தோறும் சனிக்கிழமை போலீஸ் அணிவகுப்பு நடத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையில் போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் அணிவகுப்பு நடத்தினர். இந்த அணிவகுப்பானது ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணா புரத்தில் தொடங்கியது. பின்னர் காமராஜர் சிலை, சின்னக்கடை வீதி, பஸ்நிலையம் வழியாக வந்து நகர் போலீஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. இதில்சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்