திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ் ஆலோசனையின் பேரில் திருச்சி மண்டல வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேருக்கு கோடியக்கரை சரணாலய பகுதியில் வனவிலங்குகள், பறவைகள் கணக்கெடுக்கும் முறைகள் குறித்து பயிற்சி நேற்று தொடங்கியது. நாள் ஒன்றுக்கு 40 பேர் வீதம் 5 நாட்கள் பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சியை நாகப்பட்டினம் வன உயிரினக்காப்பாளர் அபிஷேக் தோமர் தொடங்கி வைத்தார். இதில் கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான், மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி உதவி பேராசிரியர்கள் பாண்டியன், பாஸ்கர் ஆகியோர் வனவிலங்குகள் மற்றும் பறவைகள் கணக்கெடுப்பது எப்படி என்பது குறித்து பயிற்சி அளித்தனர்.