தமிழக செய்திகள்

வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு பிரதோஷ பூஜை

மேட்டுப்பாளையம் சக்தி விநாயகர் கோவிலில் வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு பிரதோஷ பூஜை நடைபெற்றது.

தினத்தந்தி

மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகே சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷத்தையொட்டி வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு நேற்று மாலை 4.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக நந்தி பகவானுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைக்கு பிறகு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு திருமஞ்சனம், மஞ்சள் தூள், வில்வ பொடி, அரிசி மாவு, பழச்சாறு, பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், தயிர், இளநீர் பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைக்கு பிறகு மாலை 6 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. கோவில் அர்ச்சகர் ஜோதி வேலவன் சிறப்பு பூஜைகளை செய்திருந்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்