தமிழக செய்திகள்

விவசாயிகள் தினத்தன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் அறிவிக்க வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை

விவசாயிகள் தினமான இன்று 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினத்தந்தி

காஞ்சிபுரம்,

திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உள்ள 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் வார்டுகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. திமுக நிர்வாகிகள் பலர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பெயரில் கிராம சபை கூட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின், ஸ்ரீபெரம்புத்தூர் அருகே உள்ள குன்னம் கிராமத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இதில் பேசிய அவர், அதிமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான மர்மம் இன்னும் நீடித்து வருவதாக அவர் கூறினார்.

மேலும் இன்று டிசம்பர் 23 ஆம் தேதி நாடு முழுவதும் விவசாயிகள் தினம் கொண்டாடப்படும் நிலையில், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக அறிவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் முதுகெலுமான விவசாயத்தை பிரதமர் காப்பாற்ற வேண்டும் என்றும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற எந்த வித தயக்கமும் இன்றி பிரதமர் மோடி முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு