தமிழக செய்திகள்

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

ஊட்டி அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.

ஊட்டி, 

ஊட்டி அருகே தங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 32). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி திவ்யா. இவர்கள் கோவையில் வசித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் தங்காடுக்கு வந்தனர். இந்தநிலையில் ரஞ்சித் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் கிராம மக்கள் உடலை அடக்கம் செய்ய முயன்றனர். இதற்கிடையே ரஞ்சித் சாவில் மர்மம் இருப்பதாக ஊட்டி ஊரக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரஞ்சித் சாவு குறித்து, அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதில் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், இதனால் தற்கொலை செய்ததும் தெரியவந்தது. பின்னர் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை