தமிழக செய்திகள்

திருவண்ணாமலையில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

தினத்தந்தி

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டு மையம் ஆகியவை இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நாளை (வெள்ளிக்கிழமை) நடத்துகிறது. தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் இந்த வேலை வாய்ப்பு முகாம் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் நடக்கிறது.

இந்த முகாமில் 15-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 250-க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, பொறியியல், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்ற வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் 4 புகைப்படம், ரேஷன் அட்டை, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேவைய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கெண்டு விவரங்களை பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு