தமிழக செய்திகள்

புதுக்கோட்டை பெண் போலீஸ் ஏட்டு உள்பட 2 பேர் பணி நீக்கம்

புதுக்கோட்டை பெண் போலீஸ் ஏட்டு உள்பட 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

புதுக்கோட்டையை சேர்ந்தவர் சுரேஷ். இவர் அரியலூரில் ஆயுதப்படை போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இதேபோல் புதுக்கோட்டை ஆயுதப்படை போலீசில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் ரேவதி. இவர்கள் இருவரையும் பணி நீக்கம் செய்து போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸ் வட்டாரத்தினர் கூறுகையில், ''பணி நீக்கம் செய்யப்பட்ட இருவரும் புதுக்கோட்டையில் பணியாற்றிய போது ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணையின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், ஏட்டு ரேவதி ஆகியோரை பணி நீக்கம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்'' என்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்