தமிழக செய்திகள்

ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரிகள் பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் தனி விமானத்தில் இன்று பயணம்

ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரிகள் இன்று பதவியேற்கும் நிலையில், அவர்களது பதவியேற்பு விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார்.

சென்னை,

நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரியாக அசோக் கெலாட்டும், மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரியாக கமல்நாத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த 2 முதல்-மந்திரிகளின் பதவியேற்பு விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெற இருக்கிறது. தங்களது பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு இருவரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தனித்தனியாக அழைப்பு விடுத்திருந்தனர். அதனை ஏற்று, மு.க.ஸ்டாலின் இன்று 2 முதல்-மந்திரிகள் பதவியேற்பு விழாவிலும் கலந்துகொள்ள இருக்கிறார்.

சென்னையில் இருந்து காலை 7 மணிக்கு தனி விமானத்தில் செல்லும் மு.க.ஸ்டாலின் நேராக ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூருக்கு செல்கிறார். அங்கு காலை 10 மணிக்கு அசோக் கெலாட் முதல்-மந்திரியாக பங்கேற்கும் விழாவில் கலந்துகொள்ளும் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்.

அதன்பிறகு, அங்கிருந்து மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலுக்கு செல்கிறார். அங்கு மதியம் 1.30 மணிக்கு கமல்நாத் முதல்-மந்திரியாக பங்கேற்கும் விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். கமல்நாத்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் அவர், பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்