தமிழக செய்திகள்

ராமநாதபுரம்: அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 9 குழந்தைகளுக்கு மயக்கம்...!

இராமநாதபுரம் அருகே அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 9 குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

கீழக்கரை,

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். அந்த குழந்தைகளுக்கு தினசரி உணவு வழங்கப்படுவது வழக்கம்.

அதன்படி இன்று உணவை சாப்பிட்ட 9 குழந்தைகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தைகள் 9 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் அங்கன்வாடி மையத்தில் சமைக்கப்பட்ட உணவில் பல்லி விழுந்துள்ளது தெரியவந்தது. இந்த உணவை உட்கொண்ட போது, வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை