தமிழக செய்திகள்

ராமநாதபுரம் கலெக்டரை தள்ளிவிட்டவருக்கு காவல் நீட்டிப்பு

ராமநாதபுரம் கலெக்டரை தள்ளிவிட்டவருக்கு காவலை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

தினத்தந்தி

ராமநாதபுரத்தில் கடந்த 16-ந் தேதி நடந்த அரசு விழா ஒன்றில் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும், நவாஸ் கனி எம்.பி.க்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது இருதரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் கீழே தள்ளிவிடப்பட்டார்.

இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து எம்.பி.யின் ஆதரவாளர் விஜயராமுவை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், ராமநாதபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்காக விஜயராமு ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி, வருகிற 14-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்