தமிழக செய்திகள்

பட்டியலின மாணவர்களுக்கு திண்பண்டம் வழங்க மறுப்பு - 2 பேர் கைது

பட்டியலின மாணவர்களுக்கு திண்பண்டம் வழங்க மறுத்த விவகாரத்தில் கடை உரிமையாளர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சங்கரன்கோவில்,

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலின மாணவர்களுக்கு திண்பண்டங்கள் வழங்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பட்டியலினத்தவர்களுக்கு பொருட்கள் தரக்கூடாது என ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாகவும், இனிமேல் யாரும் திண்பண்டங்கள் வாங்க வர வேண்டாம். இனி பொருட்கள் தரமாட்டார்கள் என வீட்டில் போய் சொல்லுங்கள் என கடை உரிமையாளர் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக ராமச்சந்திர மூர்த்தி என்பவரை கரிவலம்வந்த நல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்,மாணவர்களுக்கு திண்பண்டம் வழங்க மறுத்த பெட்டிக்கடைக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

இந்த நிலையில், பட்டியலின மாணவர்களுக்கு திண்பண்டம் வழங்க மறுத்த பெட்டிக்கடை உரிமையாளர் மகேஷ்வரன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்