தமிழக செய்திகள்

கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை

கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.

தினத்தந்தி

சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ரெட்டவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகையில், பெருமளவு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர்ச்சியாக பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தது. இதன் எதிரொலியாக கரும்பு விவசாயிகளுக்கு நிவாரண தொகையை படிப்படியாக வழங்க அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி மேலமணக்காடு கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயி ஒருவருக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. மேலும், தொடர்ந்து, பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன், விவசாயிகள் சங்கப் பொறுப்பாளர்கள் கருப்பையா, செந்தில்குமார், வேலுச்சாமி, நீலகண்டன் மற்றும் பலர் உடன் இருந்தனர். 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு