தமிழக செய்திகள்

தமிழகத்தின் ரூ.5 ஆயிரம் கோடி நிதியை கேட்டு ஜிஎஸ்டி கூட்டத்தில் அழுத்தம் கொடுக்கப்படும்- ஜெயக்குமார்

தமிழகத்திற்கு வரவேண்டிய ரூ.5 ஆயிரம் கோடி நிதியை கேட்டு ஜிஎஸ்டி கூட்டத்தில் அழுத்தம் கொடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

தினத்தந்தி

சென்னை,

35ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. மத்திய நிதி அமைச்சராக புதிதாக பதவியேற்றுள்ள நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது போன்றவை விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்க உள்ளார்.

இதற்காக டெல்லி செல்ல சென்னை விமான நிலையம் வந்த அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்திற்கு வரவேண்டிய ரூ.5 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி நிதியை கேட்டு ஜிஎஸ்டி கூட்டத்தில் அழுத்தம் கொடுக்கப்படும். முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரிலேயே அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அமைச்சர் சிவி.சண்முகம் சென்றார் என கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்