தமிழக செய்திகள்

திருப்பரங்குன்றம் அருகே விதவிதமான வவ்வால்கள் குறித்து நவீன கேமரா மூலம் ஆராய்ச்சி

திருப்பரங்குன்றம் அருகே வவ்வால்கள் குறித்து நவீன கேமரா மூலம் ஆராய்ச்சி நடந்தது.

தினத்தந்தி

திருப்பரங்குன்றம்,

வவ்வால்கள்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகரின் மைய பகுதி அண்ணா பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவின் வெளிப்புறத்தில் வவ்வால்கள் ஏராளமாக உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும்.. இந்தநிலையில் திருச்சி ஸ்ரீராம் பகுதியை சேர்ந்த விலங்குகளின் உயிரின விஞ்ஞானி பகிரதன் முருகவேல் தலைமையில் 4 பேர் கொண்ட ஆராய்ச்சி குழுவினர் கடந்த 3 நாட்களாக வவ்வாலின் இனப்பெருக்கம், வவ்வால்களின் பார்வை திறன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தன்மை குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இதற்காக திருநகர் அண்ணா பூங்காவில் உள்வாயிலில் உள்ள ஒரு மேல்நிலை நீர் தொட்டியில் மேல் பகுதியில் கூடாரம் அமைத்து அதில் அதிநவீன கிரேன் கேமரா மூலம் விதவிதமான வவ்வால்களின் செயல்பாடுகளை வீடியோவாக படம்பிடித்து பதிவு செய்து ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

தொந்தரவு செய்ய கூடாது

இந்த ஆராய்ச்சி கடந்த 3 நாட்களாக தொடர்ந்து காலை 6 மணி முதல் 8.30 மணி வரை, மாலையில் 4 மணி முதல் 6 மணி வரை நடந்தது. இதுகுறித்து விஞ்ஞானி பகிரதன் முருகவேல் கூறும் போது, வவ்வால்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாக்கும் தன்மை உள்ளது. வவ்வால்களை நாம் தொந்தரவு செய்யக்கூடாது. திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ராஜகோபுரத்தின் உள்புறம் பழுப்பு நிற வவ்வால்கள்உள்ளன. இந்த வவ்வால்கள் இருட்டில் இரை தேடுவதற்கு வெளியே சென்று விடும். பகலில் தன் இருப்பிடத்தில் தூங்கிவிடும். 48 வகையான வவ்வால்களில் இதுவும் ஒரு வகையை சார்ந்ததாகும். இந்த வவ்வால்களால் பாதிப்பு இல்லை என்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்