தமிழக செய்திகள்

வீடுகளை சீரமைக்க கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தி பாதுமக்கள் மறியல்

சமத்துவபுரம் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளை சீரமைக்க கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தி பாதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

காரியாபட்டி, 

சமத்துவபுரம் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளை சீரமைக்க கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தி பாதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமத்துவபுரம் குடியிருப்பு

நரிக்குடி அருகே உள்ள ஆதித்தனேந்தல் கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் குடியிருப்பு உள்ளது. இங்கு 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் மராமத்து செய்யப்பட்டு 12 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. எனவே சமத்துவபுரம் வீடுகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் வீடுகளை சீரமைக்க வேண்டும் என்று அங்கு வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன் அடிப்படையில் அதிகாரிகளும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கள ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து வீடுகளை பராமரிக்க பாதிப்புகளுக்கு ஏற்றவாறு நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

ஆனால் இந்த நிதி பராமரிப்பு பணிக்கு உகந்ததாக இல்லை. எனவே கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என சமத்துவபுரத்தில் குடியிருக்கும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை கண்டித்தும், கூடுதல் பராமரிப்பு நிதி ஒதுக்க கோரியும் நேற்று நரிக்குடி-ராமேசுவரம் சாலையில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட் டோர் திரண்டு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் நிதி விவகாரம் தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு