தமிழக செய்திகள்

சுத்தப்படுத்தும்போது திடீரென வெடித்த துப்பாக்கி - ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பலி

துப்பாக்கியை காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

மதுரை, 

மதுரை பெத்தானியாபுரம் தாமஸ் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். 23 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அவர் அருகில் உள்ள தனியார் வங்கியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் வேலைக்கு செல்லவில்லை.

இதன் காரணமாக அவர் வைத்திருந்த துப்பாக்கியை காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக அதனை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது தவறுதலாக அவருடைய கை பட்டு துப்பாக்கி வெடித்தது. இதில் அவரது வயிற்று பகுதியில் குண்டு பாய்ந்தது. துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு குடும்பத்தினர் வந்து பார்த்தபோது ராஜேந்திரன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அறிந்த கரிமேடு போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது எதிர்பாராத விதமாக நடந்ததா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். 

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்