தமிழக செய்திகள்

பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ரிப்பன் கட்டிட கோபுர கடிகாரம் 25 நாட்கள் இயங்காது - மாநகராட்சி அறிவிப்பு

பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ரிப்பன் கட்டிட கோபுர கடிகாரம் 25 நாட்கள் இயங்காது என மாநகராட்சி அறிவித்துள்ளது.

தினத்தந்தி

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தின் கோபுரத்தில் உள்ள கடிகாரத்தின் சில பாகங்கள் பழுதடைந்துள்ளது. இந்த கோபுரக் கடிகாரம் தொடர்ந்து தடையின்றி செயல்பட ஏதுவாக கடிகாரத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதேபோல் பழுதுகளை சரிபார்க்கும் பணியும் நடைபெற உள்ளது. எனவே, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 25 நாட்களுக்கு ரிப்பன் கட்டிடத்தின் கோபுரத்தில் உள்ள கடிகாரம் இயங்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்