கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுகாக்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

நீலகிரி மாவட்டத்தின் பிற பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால் பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி,

தமிழ்நாட்டில் மீண்டும் பருவமழை தீவிரம் அடைய தொடங்கி இருக்கிறது. தமிழகம் மற்றும் அதனையொட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழ்நாடு, புதுச்சேரியில் 3 நாட்களுக்கு அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மழை காரணமாக குன்னூர், கோத்தகிரி தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (24.11.2023) விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் அருணா அறிவித்துள்ளார். மேலும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால் பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என்றும் சேதம் குறித்த தகவல்களை தொடர்ந்து சேகரித்து வருவதாகவும் விடுமுறை தேவைப்பட்டால் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை