தமிழக செய்திகள்

செஞ்சியில் பருவ மழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் அமைச்சர் செஞ்சிமஸ்தான் பங்கேற்பு

செஞ்சியில் பருவ மழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் செஞ்சிமஸ்தான் கலந்து கொண்டா.

தினத்தந்தி

செஞ்சி, 

செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் செஞ்சியில் நடைபெற்றது.

இதற்கு ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவலு வரவேற்றார். இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், கிராமங்களில் உள்ள பொது மக்களுக்கு அனைத்தையும் செய்ய வேண்டியது ஊராட்சி மன்ற தலைவர்களே. எனவே ஊராட்சி மன்ற தலைவர்களாகிய நீங்கள் வரும் பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். மழைபாதிப்புகள் ஏற்படாத வகையில், திட்டமிட்டு செயல்பட வேண்டும். நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பு, வரத்து குறித்தும் அறிந்து, அதற்கேற்ப செயல்பட வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்காமலும் பாரித்துக்கொள்ள வேண்டும். யாரேனும் மழையால் பாதிப்புக்கு உள்ளானால், உடனடியாக அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்திட வேண்டும். நான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் நீங்கள் எந்த உதவி வேண்டுமானாலும் என்னை நேரில் அணுகி பெறலாம் என்றார் அவர்.

கூட்டத்தில் ஒன்றிய குழு துணை தலைவர் ஜெயபாலன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்க தலைவர் அணையேரி ரவி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமாறன், கண்ணன், சவுந்தரபாண்டியன், கலா, கோவிந்தராஜூலு மற்றும் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு