கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

செப்டம்பர் 4: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

தொடர்ந்து 3-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர். இதற்கிடையில், தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 99.08 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 93.38 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்