தமிழக செய்திகள்

மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் ஆக்கி போட்டி

மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் ஆக்கி போட்டி நடந்தது.

தினத்தந்தி

மாநில அளவிலான 33-வது ரோலர் ஸ்கேட்டிங் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி திருச்சி, கே.சாத்தனூர் வடுகபட்டியில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகள் வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது. இதில் திருச்சி, மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை, சேலம், திருப்பூர் உள்பட 15 மாவட்டங்களில் இருந்து அணிகள் பங்கேற்றுள்ளன. 'லீக்' அடிப்படையில் நடக்கும் இந்த போட்டிகளின் முடிவில் அதிக புள்ளிகளை பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும். தொடக்க நாளான நேற்று நடந்த ஆண்கள் சப்-ஜூனியர் போட்டிகளின் முடிவில் மதுரை அணி தங்கப்பதக்கத்தையும், கடலூர் அணி வெள்ளிப்பதக்கத்தையும், சேலம் அணி வெண்கலத்தையும் வென்றது. இதே பிரிவில் பெண்கள் போட்டியில் கடலூர், மதுரை மற்றும் திருப்பூர் அணிகள் முறையே முதல் 3 இடங்களை பிடித்தன. ஆண்கள் ஜூனியர் பிரிவில் தஞ்சை தங்கப்பதக்கமும், புதுக்கோட்டை வெள்ளிப்பதக்கமும் பெற்றது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்