தமிழக செய்திகள்

கருணாநிதி நூற்றாண்டு விழா:90,452 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சர்க்கரை பொங்கல்

தினத்தந்தி

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடுவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி சர்க்கரை பொங்கல் வழங்க அரசு உத்தரவிட்டது. கருணாநிதி பிறந்தநாளான, கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி கோடை விடுமுறை என்பதால், ஆகஸ்டு 14-ந் தேதி சர்க்கரை பொங்கல் வழங்க உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி மாநிலம் முழுவதும் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நேற்று சர்க்கரை பெங்கல் வழங்கப்பட்டது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், சத்துணவு உட்கெள்ளும் மாணவ, மாணவிகளுக்கு நேற்று சர்க்கரை பெங்கல் வழங்கப்பட்டது.

நாமக்கல் நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில், 94 மாணவ, மாணவிகளுக்கு சர்க்கரை பெங்கல் வழங்கப்பட்டது. அதேபேல் மாவட்டம் முழுவதும் 984 சத்துணவு மையங்களில் 90 ஆயிரத்து 452 மாணவ, மாணவிகளுக்கு சர்க்கரை பெங்கல் வழங்கப்பட்டதாக பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்