தமிழக செய்திகள்

மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது: சவுமியா சுவாமிநாதன்

மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேட்டியின்போது கூறினார்.

தினத்தந்தி

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

2-வது தவணை தடுப்பூசி

இந்தியாவில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து விட்டது. இதேபோல் தமிழ்நாட்டிலும் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முழுமையாக நடைபெற்று உள்ளது. 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ள வேண்டும்.கேரளா மாநிலத்தில் தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதனால் அதை தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. 3-வது அலை வராமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

நேரடி வகுப்பு

இன்றைய காலக்கட்டத்தில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று நேரடி வகுப்பில் கலந்து கொள்வது அவசியம். அவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு வராது.

இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்