தமிழக செய்திகள்

மொளசி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி

பள்ளிபாளையம்:

மொளசி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தொழிலாளி

பள்ளிபாளையம் அருகே மொளசி தொட்டிகாரன்பாளையத்தை சேர்ந்தவர் சுமித் (வயது 29). நூல் மில் தொழிலாளி. இவருடைய மனைவி கனிதா (27). இவர்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கெண்டனர். இவர்களுக்க ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை சுமதி வேலைக்கு சென்று வந்து வீட்டில் படுத்து தூங்கினார். இதையடுத்து கனிதா கணவரை எழுப்பியபோது அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கனிதா, கணவரின் அண்ணன் அமித் உதவியுடன் கணவரை மீட்டு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார்.

விசாரணை

பின்னர் சுமித் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுமித் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து கனிதா மொளசி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சுமித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சுமித் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

=======

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு