தமிழக செய்திகள்

ராசிபுரத்தில் ஓட்டல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

ராசிபுரத்தில் ஓட்டல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

ராசிபுரம்:

ராசிபுரம் டவுன் முள்ளுவாடி பகுதியை சேர்ந்தவர் சபீர். இவருடைய மகன் சாதிக் (வயது 40). இவருடைய மனைவி நஜீமா (35). சாதிக் ராசிபுரத்தில் உள்ள ஓட்டலில் தெழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நஜீமா கணவரிடம் கோபித்து கொண்டு சேலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் சாதிக் அவருடைய பெற்றோருடன் வசித்து வந்தார். மேலும் இவர் சிலரிடம் கடன் வாங்கி கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவருடைய தாய் ரஜியா ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  உடலை கைப்பற்றி ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்