தமிழக செய்திகள்

தமிழக தலைமை செயலாளர் டெல்லி பயணம்

தமிழக போலீஸ் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருப்பவர் திரிபாதி. இவர், வருகிற 30-ந் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து தமிழக புதிய டி.ஜி.பி.யை தேர்வு செய்ய டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ளவர்களின் பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

அதில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பெயர்களை இறுதி செய்ய வேண்டும். அதற்கான கூட்டம், டெல்லியில் நடைபெறுகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இதில் கலந்து கொள்வதற்காக தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பிரபாகர், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளில் சைலேந்திரபாபு, கரண் சின்கா இவர்களுக்கு அடுத்ததாக சஞ்சய் அரோரா மற்றும் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள சுனில்குமார் சிங், கந்தசாமி, ஷகில் அக்தர் ஆகியோரது பெயர்கள் டி.ஜி. பி.தேர்வு பட்டியலில்

உள்ளன. எனினும் சைலேந்திரபாபு, கரண் சின்கா ஆகியோரில் ஒருவருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை