தமிழக செய்திகள்

தமிழகத்தில் ஒரே நாளில் 20.45 லட்சம் பேருக்கு தடுப்பூசி- மக்கள் நல்வாழ்வுத்துறை

14-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் நடந்தது.

சென்னை,

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி செயல்படுகிறது. இதனால், தமிழகத்தில் கொரொனா தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்களை தமிழக அரசு நடத்தி வருகிறது.

இந்தநிலையில் 14-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் நடந்தது. தமிழகம் முழுவதும் 20 லட்சத்து 45 ஆயிரத்து 347 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதில் 6 லட்சத்து 81 ஆயிரத்து 346 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 13 லட்சத்து 64 ஆயிரத்து ஒருவரும் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டனர். இந்தத் தகவல்களை மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை