தமிழக செய்திகள்

காவிரி நீர் பங்கீடு தொடர்பான கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் கடிதம்

காவிரி நீர் பங்கீடு தொடர்பான கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என பிரதமருக்கு முதல் அமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

காவிரி நீர் பங்கீடு குறித்து முடிவு செய்ய மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக அரசு இன்னும் தங்களது பிரதிநிதிகளை நியமிக்கவில்லை. மேலும், நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் குமாரசாமி முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

இந்நிலையில், காவிரி நீர் பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்த உடனே மேலாண்மை ஆணையத்தை கூட்ட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும், கடந்த 6 ஆண்டுகளாக உரிய நேரத்தில் கர்நாடகா, தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிடவில்லை என அந்த கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்