தமிழக செய்திகள்

சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு

சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

சென்னை,

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 7-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளும் திறக்கப்பட்டன. ஆனாலும் பொது மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், நோய் தோற்று தீவிரம் காரணமாகவும் சென்னை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. மேலும் வணிக வளாகங்கள், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. முகக்கவசம் அணியாதவர்களுக்கு டோக்கன் மறுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருக்கும் மதுக்கடைகள் இன்று முதல் திறக்கப்படும் என்றும், மதுக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்திருந்தது.

மதுப்பிரியர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வரிசையில் நின்று மதுபாட்டில்கள் வாங்கிச் செல்லும் வகையிலும் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை