சென்னை,
2022 ஆம் ஆண்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 9 ஆயிரத்து 494 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கான அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி) வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு வருகின்ற ஏப்ரல் 2-வது வாரத்தில் நடைபெற உள்ளது.
அரசு கலைக்கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.
அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வு நவம்பர் 2-வது வாரத்தில் நடைபெற உள்ளது. மேலும் அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு டிசம்பர் 2-வது வாரத்தில் நடைபெற உள்ளது.