தமிழக செய்திகள்

தேர்வு, தேர்தல் இரண்டிலும் பணியாற்ற கூடிய ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும்; தம்பிதுரை எம்.பி.

தேர்வு, தேர்தல் இரண்டிலும் பணியாற்ற கூடிய ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்று தம்பிதுரை எம்.பி. கூறியுள்ளார்.

தினத்தந்தி

ஜாக்டோ- ஜியோ அமைப்பின் கீழ் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்துவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 22ந்தேதியில் இருந்து தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தினால் அரசு பணிகள் மற்றும் கல்வி பணிகள் பாதிப்படைந்து உள்ளன.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்களது பணியிடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என பள்ளி கல்வி துறை எச்சரிக்கை செய்தது.

இந்த நிலையில், கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ஆசிரியர், அரசு ஊழியர்களிடம் ஓய்வூதிய திட்டத்திற்காக பிடித்தம் செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்

அவரவர் கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.

தேர்வும் வருகிறது, தேர்தலும் வருகிறது. இவை இரண்டிலும் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் தம்பிதுரை எம்.பி. கூறியுள்ளார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்